17-07-2020, ஆடி 02, வெள்ளிக்கிழமை.
இராகு காலம் – பகல் 10.30-12.00
எம கண்டம்- மதியம் 03.00-04.30
குளிகன் காலை 07.30 -09.00.
நாளைய ராசிப்பலன் – 17.07.2020.
மேஷம்
உடன்பிறப்புக்கள் உதவியாக இருப்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். நெருங்கியவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உறவினர்கள் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும்.
ரிஷபம்
சுபகாரியங்கள் கைகூடும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்
வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் பிரச்சனையை தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை சற்று அதிகரிக்கும்.
கடகம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். தொழில் தொடர்பான விஷயங்களில் வெற்றி உண்டாகும்.
சிம்மம்
உறவினர்களால் அனுகூலம் உண்டு. உடலில் ஒரு சில உபாதைகள் ஏற்படும். எதிலும் கவனம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை கொடுக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
கன்னி
நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுப முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. தொழிலில் மாறுதல்களை செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சோர்வுடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும்.
விருச்சிகம்
உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.
தனுசு
எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும் உதவிகள் தாமதமின்றி பிள்ளைகள் வழியில் நல்லது நடக்கும் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் புதிய நபர் அறிமுகம் உண்டாகும்.
மகரம்
குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடல் நிலையில் சோர்வு உண்டாகும். பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
கும்பம்
குடும்பத்திலுள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டு. பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும். பணப்புழக்கம் சற்றே குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சனைகள் உண்டாகும்.
மீனம்
பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.