பிரபல நடிகரான சுதீப் கர்நாடக மாநிலத்தில் 4 அரசுப்பள்ளிகளை தத்து எடுத்தது பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் கிச்சா சுதீப். இவர் ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். அதன்பின் விஜய்யுடன் புலி படத்தில் நடித்திருந்தார். இதேபோல் பாலிவுட்டில் தபாங் என்ற படத்தில் சல்மான் கானுக்கு வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சுதீப் கர்நாடகாவின் சித்ர துர்கா மாவட்டத்தில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதோடு, மட்டுமில்லாமல் ஆசிரியர்களின் சம்பளச் செலவுகளையும் சுதீப் ஏற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் டிஜிட்டல் வழி கல்விக்காக இந்த அரசுப் பள்ளிகளில் கணினிகளையும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நான்கு பள்ளிகளின் வசதிகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கு, ஒரு தன்னார்வலர் குழுவை சுதீப் நியமித்து வைத்துள்ளாராம். சுதீப்பின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டே வருகின்றன.