தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது
அதிகபட்ச உயிரிழப்பாக தலைநகர் சென்னையில் 1,318பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 172 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 134 பேரும், மதுரை மாவட்டத்தில் 129 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 5,106 பேர் இன்று மட்டும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,416 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 46,714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.