Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…தடைகள்  விலகிச்செல்லும்…வெற்றி உண்டாகும்…!

மீன ராசி அன்பர்களே…!   இன்று குடும்ப ஒற்றுமை பலப்படும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சியில் இருந்த தடைகள்  விலகிச்செல்லும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணி நிரந்தரம் பற்றிய தகவல் நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவுகள் மட்டும் செய்ய வேண்டியிருக்கும்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது ரொம்ப நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மையை கொடுக்கும். தூர தேசத்து உறவினர்களால் நன்மை நடக்கும். நண்பர்களாலும் இன்று நன்மை ஏற்படும். ஆனால் யாரையும் தயவுசெய்து குறை மட்டும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். நிதி மேலாண்மையில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.

மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை ஏதும் எண்ணவேண்டாம். காதல்கள் எப்போதும் போலவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் நன்மை நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.அது  உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் மற்றும் நீலநிறம்.

Categories

Tech |