சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்த மூன்று கண்கள் கொண்ட குழந்தையின் காணொளி குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது
சமூக வலைத்தளத்தில் சமீப நாட்களாக மூன்று கண்களுடன் இருக்கும் குழந்தையின் காணொளி அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அது குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் வித்தியாசமாக ஏதேனும் காணொளி பகிரப்பட்டால் அது வைரலாக மாறிவிடும். அந்த காணொளி உண்மைதானா என்பது குறித்து யாரும் ஆராய்வதில்லை. அப்படி ஒரு காணொளி தான் கடந்த சில தினங்களாக சமூகவலைதளத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில் குழந்தை ஒன்று மூன்று கண்களுடன் உள்ளது. இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்த காணொளி உண்மையானது அல்ல இது எடிட்டிங் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. குழந்தையின் வலது கண்ணும் நெற்றிக் கண்ணும் ஒரே மாதிரியான அசைவுகளை கொண்டுள்ளது. மூன்றாவது கண்ணோடு குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதான விஷயம் இது டிப்ரோசோபஸ் என சொல்லப்படும் பிறவி கோளாறால் ஏற்படும் விளைவு ஆகும்.
https://youtu.be/9MQubgKCTWI