லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் டிரைவர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டை தச்சநல்லூர் புறவழிச்சாலையில் நள்ளிரவு நேரத்தில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் லாரி இடிபாடுகளுக்குள் மாட்டிக்கிடந்த லாரி டிரைவர்கள் உட்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல் துறையினர் விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், வண்ணாரப்பேட்டையிலிருந்து தச்சநல்லூர் நோக்கிச் சென்ற லாரி மீது எதிரே தச்ச நல்லூரிலிருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி வந்த மினி லாரி நேருக்கு நேர் மோதியுள்ளது.. நெல்லை வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்ற லாரியை, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நெட்டூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்ற நபர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.. எதிரே வந்த மினி லாரியில் மாடுகள் ஏற்றி வரப்பட்டுள்ளன.
இதனிடையே இந்த விபத்தில் மினி லாரியின் பின்பக்கத்தில் இருபுறமுமுள்ள கதவுகள் கடுமையாக சேதமடைந்ததால் அதன் பலகைகள் கிழித்ததில் 2 மாடுகள் உயிரிழந்தன. மேலும் இந்தசம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.