கொரோனா ஊரடங்கு உத்தரவால் திரைப்பட தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலைவாய்ப்பில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு பல கட்டங்களில் நடிகர்கள் உதவி செய்து வந்தனர். தமிழக அரசும் இவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் இதற்கான ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூபாய் 1000 நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 9,882 தொழிலாளர்களுக்கு ரூ.98,82,000 ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுவரை 2 முறை திரைப்பட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.