Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மார்க் கம்மியா வாங்கிட்டோம்… “பள்ளியில் முதலிடம்”… ஆனாலும் மாணவர் எடுத்த விபரீத முடிவு..!!

தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த  மாணவன், மதிப்பெண் குறைவாக பெற்றதால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மகன் அசோக்குமார்.. இவருக்கு வயது 17 ஆகிறது.. குடியாத்தத்தில் இருக்கும்  தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணக்கு-உயிரியல் பாடப்பிரிவில் 12ம் வகுப்பு படித்தார். இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிந்து அதற்கான முடிவுகள் நேற்று காலை திடீரென வெளியாகின.

அதில், மாணவன் அசோக்குமார் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு 481 மதிப்பெண்கள் பெற்று அவர் படித்த பள்ளியிலேயே முதல் மாணவராக வந்துள்ளார்.. ஆனால், தான் பொது தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டோமே என்று மன உளைச்சலில் இருந்த அசோக்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குடியாத்தம் போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.. ஆண்டு தோறும் இது போன்ற விபரீத சம்பவம் நடக்கத்தான் செய்கிறது.

அனைத்து மாணவர்களுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், மதிப்பெண் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை தீர்மானித்து விடாது. மதிப்பெண் குறைவாக எடுத்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியாது என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.. ஆகவே மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் மன வேதனை அடையாமல் மறுதேர்வுக்கு தயாராகி வெற்றி பெறுங்கள்.. அதேநேரத்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலோ அல்லது தேர்ச்சி பெறா விட்டாலோ அவர்களை திட்டாமல் உறுதுணையாக இருங்கள்…

Categories

Tech |