Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் புதிய கார் அறிமுகம்… போட்டி போடும் ஃபோர்டு நிறுவனம்… விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் புதிய கார் அறிமுகம் செய்துள்ளது.

இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனம் புதிய இகோஸ்ப்ரோட் டைட்டானியம் ஆட்டோ வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கார் ஆனது டாப் எண்ட் ஆட்டோமேட்டிக் வேரியண்டின் கீழாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நிர்ணயம் செய்துள்ள இந்த காரின் விலை ரூ.10.67 லட்சம் ஆகும். இவ்விலையானது டாப் எண்ட் மாடலின் விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.90 ஆயிரம் விலை குறைவாகவே உள்ளது. இத்தகைய விலைக்கு ஏற்றவாறு புதிய வேரியண்டில் வைப்பர்கள், ஆட்டோ ஹெட்லைட், முன்புற மேப் லைட்கள், பின்புற இருக்கை ஆம்ரெஸ்ட் ஆகியவை நீக்கப்பட்டு, அத்துடன் சன்ரூஃப்ட் மற்றும் முன்புற இரட்டை ஹேர் பேக்குகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்புதிய இகோஸ்போர்ட் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினையும், 1.5 லிட்டர் டீசல் என்ஜினையும் இரண்டுவித ஆப்ஷன்களில் வழங்கியுள்ளது. இந்திய சந்தையில் உள்ள டாடா நெக்ஸான், ஏஎம்டி ஹூண்டாய், வென்யூ டிசிடி மற்றும் மாருதி சுசுகி, விட்டாரா பிரெஸ்ஸா, மைல்டு ஹைபிரிட் ஏடி ஆகிய மாடல்கள் அனைத்திற்கும் போட்டியாக புதிய இகோஸ்போர்ட் மாடல் அமைந்துள்ளது.

Categories

Tech |