Categories
கிரிக்கெட் விளையாட்டு

தட்டி தடுமாறும் மும்பை அணி…. 10 ஓவர் முடிவில் 57/3…..!!

மும்பை அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 57 ரன்களுடன் விளையாடி வருகிறது 

12வது  ஐ.பி.எல் தொடரின் 15-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பையில்  உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக்கும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில் டி காக் 4 ரன்களில் தீபக் சாஹர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த சூர்யா குமார் யாதவும், ரோஹித் சர்மாவும் ஜோடி சேர்ந்தனர். சூர்ய குமார் யாதவ் தொடக்கத்தில்  பவுண்டரியாக விளாசினார். அதன் பின் ரோஹித் சர்மா 13, ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில்  ஆட்டமிழக்க அடுத்து வந்த யுவராஜ் சிங் சிறிது நேரத்தில் இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து க்ருனால் பாண்டியாவும், சூரியகுமார் யாதவும் விளையாடி வருகின்றனர்.

Categories

Tech |