விவோ நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்களை பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியச் சந்தையில் விவோ எக்ஸ்50 மற்றும் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலினை விவோ நிறுவனம் தான் அறிவித்தபடி அறிமுகப்படுத்தியது. இத்தகைய ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 32 எம்பி செல்ஃபி கேமரா, இன்டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆகியவற்றை வழங்கியுள்ளது. விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போனில் புகைப்படத்தினை எடுப்பதற்காக எக்ஸ்50 மாடலில் 48 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி மேக்ரோ சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 13 எம்பி போர்டிரெயிட் கேமரா ஆகியவற்றை வழங்கியுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸரையும் வழங்கியுள்ளது. விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராஸஸரை வழங்கியும், 48 எம்பி கேமரா, கிம்பல் கேமரா சிஸ்டம், 5 ஆக்சிஸ் OIS, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்பி 5எக்ஸ் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவற்றையும் வழங்கியுள்ளது.
விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் ஆனது ஃபிராஸ்ட் புளூ, கிளேஸ் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கின்றது. மேலும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடலின் விலையானது ரூ.34990 எனவும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மாடலின் விலையானது ரூ.37990 எனவும் இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் ஆனது ஆல்ஃபா கிரே நிறத்தினில் கிடைக்கின்றது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலினை கொண்ட இதன் விலையானது ரூ.49990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஜூலை 16 இல் முன்பதிவு துவங்கி விற்பனையானது ஜூலை 24 இல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.