கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவின் மையமாக விளங்கும் தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பெருமளவு தொழிலாளர், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் பாதிப்பை உணர்ந்து தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து, நிவாரண உதவியை அளித்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது தெருக்கூத்து கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் உள்ள திருநங்கைகள், தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆயிரம் நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூபாய் 5 லட்சம், திருநங்கைகளுக்கு ரூபாய் 16 லட்சம், தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம், பழங்குடி இன மக்களுக்கு 26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.