Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி கட்டணம் – அரசு முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த பெற்றோர்களுக்கு பல்வேறு வகையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இந்த காலகட்டங்களில் பள்ளி கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர். கட்டணம் வசூலித்தால் தான் ஆசிரியர்களும், அலுவலர்களும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் அரசு உதவி பெறாத சுயநிதி கல்லூரிகளில் 3 மூன்று தவணைகளாக கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் மூன்று தவணைகளாக கல்விக்கட்டணத்தை வசூல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

தனியார் பள்ளிகள் இந்த காலகட்டத்தில் 25 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம் என்றும், பள்ளிகள் திறந்த பிறகு 25 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்றும், பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு பிறகு 25 சதவீத கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. போதிய வருமானம் இன்றி வீட்டில் முடங்கி இருக்கும் பொது மக்களுக்கு தமிழக அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |