Categories
மாநில செய்திகள்

ரூ11,121 செலுத்தி…. ஒரே நாளில் 23,000 பேர் விண்ணப்பம்…. அண்ணா யூனிவர்சிட்டி தகவல்….!!

பிஇ பட்ட படிப்புக்காக ஒரே நாளில் 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் பொறியியல் படிப்புக்கான சேர்க்கையானது ஆன்லைன் மூலம் துவங்கியுள்ளது. அட்மிஷன் துவங்கிவிட்டதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பிலும் நேற்று திடீரென பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் தங்களது மதிப்பெண்களை கொண்டு பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் தொடர்ந்து அப்ளை செய்து வந்தனர். அதன்படி, ஒரே நாளில் 23 ஆயிரம் பேர் பொறியியல் படிப்பு படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்கு கட்டணமாக ரூபாய் 11,121 செலுத்தியுள்ளார்கள் எனவும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் இதுபோன்று விண்ணப்பங்களை தொடர்ந்து சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |