தினமும் 20 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் வாழ்நாள் அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
நமது முந்தைய தலைமுறையினரின் ஆயுட்காலம் 100 வயதிற்கு மேல் இருந்தது. இந்த காலகட்டத்திலும் 100 வயதிற்கு மேல் வாழக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் தற்போது இருக்கக்கூடிய தலைமுறையினருக்கு ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ஆயுட்காலம் குறைவதற்கான காரணம், நமது சாப்பாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டது தான். நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு, அதே சமயம் நல்ல உடலுழைப்பை போட்டு ஆரோக்கியமாக தங்களது உடல் நிலையையும், மன நிலையையும் நமது மூதாதையர்கள் பராமரித்து வந்தனர்.
அதன் காரணமாகவே அவர்களது வாழ்நாள் நீண்ட வருடங்களாக இருந்தது. தற்போது கொரோனாவுக்கு பின் நமது சாப்பாட்டில் மீண்டும் பழைய பாரம்பரிய முறையை நாம் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டோம். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக இந்த முறையை கையாண்டு வருகிறோம். அதே போல், தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நமது வாழ்நாளை அதிகரிக்குமென, ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உடலும், மனமும் வலுபெறுவதினால், நமது வாழ்நாள் தானாகவே அதிகரிக்கிறது. அதனால் கட்டாயம் தவறாது உடற்பயிற்சி செய்யுங்கள். இதன் மூலமாக 35-லிருந்து 40க்கு மேல் வரக்கூடிய உடல் தடித்தல், சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் வராமல் வாழ்நாள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.