குடும்ப தகராறு காரணமாக விரக்தி அடைந்த மனைவி கணவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் தலைநகர் காந்திநகரில் வசிக்கும் வக்ஜி படேல்-உமியாபடேல் என்ற தம்பதியினர் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே பிடிக்காமல் சண்டையிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் கணவரை விட்டு தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் எப்போதாவது கணவரின் வீட்டுக்கு போகும் உமியா ஒரு கட்டத்தில் கணவர் மீது விரக்தி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து உமியா கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து முதலில் உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
ஆனால் விஷம் எதிர்பார்த்தது போல் வேலை செய்யவில்லை அதனால் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே வக்ஜி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து உமியாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உமியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலில் கத்தியால் குத்துவதற்கு முன்பு அவரே விஷம் குடித்து கொண்டதாக உமியா தெரிவித்தார். ஆனால் மேற்கொண்டு விசாரிக்கையில் விஷம் கொடுத்தும் அவர் சாகததால் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டார்.