Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன சந்தேகம் என்று தெரியல…. ஏதாவது காரணம் வேணும்லா…. முதல்வர் விமர்சனம் …!!

திமுகவின் மின்கட்டண போராட்டம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி அடிக்கடி தெளிக்கப்டுகின்றது. காவல் துறை மூலமாகவும், உள்ளாட்சித் துறை மூலமாக தெருத்தெருவாக ஒலிபெருக்கி மூலமாக அந்த அரசு அறிவித்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்வாய்ப்பட்ட அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைத்து இருக்கின்றோம்.

கெயில் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு முதலில் 10% இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தோம், இப்போது  100% இழப்பீடு தொகை வழங்க இருக்கின்றோம். குழாய்கள் பதிக்கப்படும் நிலத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மரங்கள் வைக்க முடியாது.  இந்த திட்டம் விவசாயிகள் அனுமதியோடு தான் செயல்படுத்தப்படும்.

பெரியார் சிலையை அவமதித்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின் கட்டணத்தில் எந்த குளறுபடியும் கிடையாது. நீதிமன்றத்திற்கு போனாங்க… நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்டது. இதுக்கு மேலயும் குளறுபடி இருக்குனு என்ன சந்தேகம் என்று தெரியல. மின்கட்டணம் போராட்டம் என்பது வேண்டுமென்றே ஏதாவது ஒரு காரணத்தை காட்டி போராட்டம் நடத்த படுகின்றது என்று முதல்வர் விமர்சித்தார்.

Categories

Tech |