கடுமையாக்கப்பட்டு தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என பிரபல இயக்குனர் சேரன் ட்விட் செய்துள்ளார் .
சமீபத்தில் சாத்தான்குளத்தில் நடைபெற்ற வியாபாரிகள் படுகொலையானது காவல்துறையினருக்கு ஒரு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகள் தான். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைதாகியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க மத்திய பிரதேசத்தில் நேற்று விவசாயி ஒருவரின் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சித்தபோது, அறுவடை முடியும் வரை அனுமதி அளிக்குமாறு விவசாயி கேட்டபோது, அவர் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதனால் விரக்தியடைந்த விவசாயி தம்பதியினர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது குழந்தைகள் தங்களது பெற்றோரை கட்டியணைத்து கதறி அழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக மிகப்பெரிய அதிருப்த்தியை மக்களிடையே ஏற்படுத்தியது.
இதுகுறித்து தற்போது இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சாத்தான்குளம் சம்பவம், மத்திய பிரதேசத்தில் விளை நிலத்திலிருந்து தம்பதியரை போலீஸ் அடித்து விரட்டும் சம்பவம் மற்றும் ஏழு குழந்தைகளும் அழும் வைரல் வீடியோவை குறிப்பிட்டு, இந்தியா முழுக்க ஒரே மாதிரிதான் காவல்துறை இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காவல் துறையில் சிலர் தங்களது பணி குறித்து தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். சட்டத்தை கடுமையாக்கி தவறு செய்பவர்களை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.