மாருதி சுசுகி நிறுவனமானது 1.34 லட்சம் மதிப்புள்ள கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
பலேனோ மற்றும் வேகன் ஆர் ஹேட்ச்பேக் என்ற இரண்டு மாடல்களையும் மாருதி சுசுகி நிறுவனம் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளது. இந்த 2 மாடல்களிலும் எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தும் அமைப்பில் கோளாறு இருப்பது தொடர்பான ஆய்வு செய்ய அழைக்கப்படுகின்றது. 2018 நவம்பர் 15 முதல் 2019 அக்டோபர் 15 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட வேகன்-ஆர் 1.0 லிட்டர் மாடல் மற்றும் 2019 ஜனவரி 8 முதல் 2019 நவம்பர் 4 வரை உற்பத்தி செய்யப்பட்ட பலெனோ பெற்றொள் மாடல் திரும்ப பெறப்படுகின்றது.
மொத்தமாக 134885 யூனிட்களை மாருதி சுசுகி நிறுவனம் திரும்ப பெறுகிறது. பலேனோ மாடல் பயன்படுத்துவோர் நெக்சா வலை தளம் சென்று மாடலில் கோளாறு உள்ளதா என அறிந்து கொள்ளலாம். வேகன் ஆர் மாடல் பயன்படுத்துபவர்கள் கோளாறு உள்ளதா என மாருதி சுசுகி அதிகாரப்பூர்வ வலைத்தளம் சென்று தெரிந்துகொள்ளலாம்.