Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்துக்குள் – அதிரடி உத்தரவு

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அதில் பள்ளிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தில், பள்ளி கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் உத்தரவில்,

அரசு உதவி பெறாத பள்ளிகள் முதற்கட்டமாக 40 சதவீத பணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிடுகிறார். அதே போல 2019-2020ஆம் கல்வி ஆண்டுக்கான பாக்கியையும் சேர்த்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வசூலித்துக் தனியார் பள்ளிகள் கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதே போல 2 மதத்திற்கு பின் 35 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Categories

Tech |