கொரோனாவில் நமக்கு என்ன ஆக போகுது என்று மக்கள் அசாட்டாக இருப்பதாக தமிழக முதல்வர் வேதனை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசினார். அப்போது, கொரோனா நோய் ஏற்பட்ட உடனே, அறிகுறி தென்படும் போது மருத்துவமனையில் போய் சேருவதில்லை. அசால்ட்டாக இருந்து விடுகிறார்கள். நமக்கு என்ன ஆகிற போகுது அப்படின்னு நினைத்து விடுகின்றனர். இதனால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது. அறிகுறி தெரிந்தவுடனே மருத்துமனைக்கு போய் சேர்ந்து சிகிச்சை செய்து கொண்டால் இதில் இருந்து குணமாகி விடலாம்.
இதுவரைக்கும் பாதிக்கப்பட்டவர்களில் 67% பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்காங்க. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அதிகமா கொரோனா டெஸ்ட் பண்ணுனது நாம தான். அதனால தான் நிறைய பேரு கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்து அதிகமாக சோதனை செய்ததால் தான் அதிகமானோரை கண்டறிந்து, உரிய சிகிச்சை அளித்ததன் விளைவு இறப்பை குறைந்துள்ளோம்.
மகாராஷ்டிராவில் 11 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துள்ளார். நம்மளை விட பாதி அளவு தான் சோதனை செய்கிறார்கள். சோதனையை அதிகரிக்கும் போது தான் எங்கெங்கெல்லாம் யார் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டறிந்து அதை, உடனுக்குடன் அவர்களை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளிக்கக் கூடிய காரணத்தினால் இன்றைக்கு உயிர் இழப்பை தடுத்து நிறுத்தி உள்ளோம், நோய் பரவலை தடுத்து இருக்கிறோம்.