சிம்ம ராசி அன்பர்களே…! எண்ணங்கள் ஈடேறும் நாளாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அனைத்துமே அகலும். சிக்கனத்தை கடைப்பிடிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் உண்டாகும். மன குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும் மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டேதான் இருக்கும்.
எதையும் கவனமாக கையாளுங்கள். அது போதும் குடும்ப பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். கடன் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். அதே போல் இன்று புதிய முயற்சிகள் மட்டும் ஏதும் வேண்டாம். புதியதாக கடன்களில் வாங்க வேண்டாம். புத்தி உள்ளவர்கள் மேலதிகாரியிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். நிதானத்தை கடைபிடியுங்கள். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அது மட்டுமில்லாமல் இன்று யாருக்கும் அறிவுரை ஏதும் சொல்ல வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்டநிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.