விருச்சிக ராசி அன்பர்களே…! வெளிநாட்டு தகவலால் வியப்படையும் நாளாக இருக்கும். வீடு மாற்றங்களால் நன்மை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சிலரில் சந்திப்பதற்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரலாம். மகிழ்ச்சிக்கும் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவர் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக மதிப்பு கொடுப்பீர்கள். அனைவரையும் மதித்து நடப்பதால் அனைவருக்கும் பிடிக்கும். அதேபோல் உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் நீங்கள் உயர்துவீர்கள். உறவினரின் பகை மாறி நல்ல முன்னேற்றமும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீளம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.