தமிழகத்தில் இன்று மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் தான் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகின. அதில், தமிழகத்தில் இன்று மட்டும் 4,538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,56,369 ல் இருந்து 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 79 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 2,315 -ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 47,539 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கான பரிசோதனை இதுவரை 17,56,998 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 3,391-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,10,807 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 68.86 % பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 47,782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.