இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ.
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,10,807 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 47,539 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 17,56,998 ஆக இருக்கின்றது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 47,782 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் பாதிப்பு குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது.
இன்று கொரோனா தொற்று 37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது. இன்று இதுவரை இல்லாத அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று குணமடைந்தவர்களை விட பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது..
தமிழகம் முழுவதும் கொரோனா மொத்த பாதிப்பு மாவட்டம் வாரியாக:
அரியலூர் – 609
செங்கல்பட்டு – 9035
சென்னை – 83377
கோயம்புத்தூர் – 1785
கடலூர் – 1690
தர்மபுரி – 324
திண்டுக்கல் – 1356
ஈரோடு – 464
கள்ளக்குறிச்சி – 2107
காஞ்சிபுரம் – 4422
கன்னியாகுமரி – 2041
கரூர் – 231
கிருஷ்ணகிரி – 345
மதுரை – 7858
நாகப்பட்டினம் – 396
நாமக்கல் – 278
நீலகிரி – 371
பெரம்பலூர் – 200
புதுக்கோட்டை – 907
ராமநாதபுரம் – 2249
ராணிப்பேட்டை – 1915
சேலம் – 2186
சிவகங்கை – 1260
தென்காசி – 926
தஞ்சாவூர் – 952
தேனி – 2229
திருப்பத்தூர் – 512
திருவள்ளூர் – 8329
திருவண்ணாமலை – 3709
திருவாரூர் – 830
தூத்துக்குடி – 3129
திருநெல்வேலி – 2345
திருப்பூர் – 409
திருச்சி – 2004
வேலூர் – 3628
விழுப்புரம் – 2039
விருதுநகர் – 2948