உ.பியில் தாயாரே தனது 9 வயது மகளை கொன்று நாடக மாடிய சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள தர்யாபாத் என்ற கிராமத்தில் மகேஷ்-மோனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அன்ஷிகா என்ற 9 வயது மகள் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அன்ஷிகா தன் வீட்டு படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அப்போது வயல்வெளி வேலையை முடித்து வீட்டிற்கு திரும்பிய மகேஷ் இந்நிகழ்வை கண்டு அதிர்ச்சியில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். அச்சமயத்தில் வீட்டில் கிடந்து உள்ள பல்வேறு தடயங்களை கொண்டு அன்ஷிகா கொலை செய்யப்பட்டதில் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளதை போலீசார் கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து மகேஷ்-மோனி தம்பதியினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மௌனமாகவே எனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்து நாடகமாடிய மோனியை சந்தேகித்த காவல் துறையினர் அவர்களது பாணியில் விசாரித்தனர்.
அந்த விசாரணையில் மகளை தான் கொன்றதாக ஒப்புக்கொண்ட மோனி அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். தேவி பிரசாத் என்ற நபருக்கும் எனக்கும் தொடர்பு இருந்த நிலையில், சம்பவம் அன்று என் கணவர் வெளியில் சென்றிருந்த போது, பிரசாத்துடன் நான் தனிமையில் இருந்ததை என் மகள் அன்ஷிகா பார்த்து விட்டாள். இந்த விஷயத்தை தன் அப்பாவிடம் கூறி விடுவேன் என கூறினாள். அவள் சொல்வதை கேட்டு பயந்து நானும் பிரசாத் மற்றும் அவரின் இரு நண்பர்களும் சேர்ந்து அன்ஷிகாவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டோம் என கூறியுள்ளார். பின்னர் மோனி, பிரசாத் உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.