Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தொட முடியாத எண்ணிக்கை…. புதிய வரலாறு படைத்த தமிழகம்…. மாஸ் காட்டிய சோதனை …!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது பிற மாநிலங்களை வியப்படைய வைத்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று 4,538 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 1,243 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 83,377ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 1,10,807பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 79பேர் உயிரிழந்ததால் கொரோனா பலி 2,315ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பிற மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிடும் போது இங்கு தான் உயிரிழப்பு வீதம் மிகவும் குறைவாக உள்ளது. இதற்க்கு காரணம் அதிகமான பரிசோதனை. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 17,56,998பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தமிழகம் கலக்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை கூட தமிழகத்தின் பரிசோதனையை அளவை பாராட்டியுள்ளது.

அதிகமான நோய் தொற்று உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட 1.50 லட்சம் பரிசோதனை நடந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசஷ் 1.30லட்சம், ஆந்திர பிரதேசம் 1.30 லட்சம், ராஜஸ்தான் 1.20 லட்சம் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. இதில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 47,539 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு பிற மாநிலங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய கொரோனா பரிசோதனை ஒரே நாளில் இல்லாத உச்சமாகும். அதே போல பிற மாநிலங்களும் எட்டிப்பிடிக்க முடியாத புதிய வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |