ஜம்மு காஷ்மீர் குல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள நாகநாத் பகுதியினுள் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.. அந்ததகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நேற்று காலை நாகநாத் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினைச் சார்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.. மேலும் பாதுகாப்பு படையிலுள்ள ஒரு வீரர் காயமடைந்தார். இதனை தொடர்ந்து தேடுதல் வேட்டையானது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.