Categories
தேசிய செய்திகள்

2ஆம் இடம் கொடுத்த அதிர்ச்சி….. 4ஆம் இடம் கொடுத்த மகிழ்ச்சி…. உலகளவில் இந்தியா …!!

உலகளவில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பில் இந்தியா 2ஆவது இடம் பெற்றுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உலகளவில் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஒரு கோடியே 41 லட்சம் பேரை தாக்கியுள்ளது. உயிரிழப்பு 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. 84 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் புதிதாக இரண்டு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் உலகளவில் பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

நேற்று பாதிப்பு விவரம்:

அமெரிக்கா – 74,987

இந்தியா – 34,820

பிரேசில் – 33,959

சவுத் ஆப்பிரிக்கா 13373

அதேபோல உலக அளவில் மேற்கொண்டுள்ள கொரோனா பரிசோதனையில் இந்தியா பிரிட்ட்டனை பின்னுக்கு தள்ளி 4 இடம் பெற்றுள்ளது.

அதிக பரிசோதனை செய்த நாடுகள்:

சீனா – 90,410,000

அமெரிக்கா – 46,608,707

ரஷ்யா – 24,364,568

இந்தியா – 13,072,718,

பிரிட்டன் – 12,892,406

Categories

Tech |