நேற்று தமிழகத்தில் தான் அதிகமான கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் ஒலிக்கும் ஒரே பெயர் கொரோனா. இதில் இருந்து எப்படி மீறலாம் ? எவ்வளவு காலம் ஆகும் ? என்று எதிர்பார்ப்புகளோடு மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்து உள்ளது. மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் பாதிப்பு தினமும் புதுப்புது உச்சத்தைத் தொட்டு கொண்டு தான் இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் புதிதாக 34 ஆயிரத்து 820 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
இது நேற்று ஒரே நாளில் உலகளவில் அதிக நோய் தொற்று கொண்ட வரிசையில் 2ஆவது இடமாகும். இதனால் மொத்த பாதிப்பு 10,40,457ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 26,285பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 17,476 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்த எண்ணிக்கை 6,54,078 ஆகும். உலகளவில் நேற்று ஒரே நாளில் அதிகமானோரை குணப்படுத்திய வரிசையில் இந்தியா மூன்றாமிடம் இருக்கின்றது.
நேற்று அதிகமானோரை மீட்டு தமிழகம் அசதியுள்ளது. நாட்டிலேயே நேற்று ஒரே நாளில் தமிழநாடு தான் 3,391பேரை மீட்டுள்ளது. அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2,217 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்தனர். அடுத்தபடியாக டெல்லியில் – 1606, தெலுங்கானா – 1,410, கர்நாடகா – 1028என அடுத்தடுத்து உள்ளன. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக அதிக பரிசோதனையும் தமிழகம் தான் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.