தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் உச்சம் இருந்த தலைநகர் சென்னை, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இது ஒட்டுமொத்த மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய விஷயமாக பார்க்கப்பட்டாலும், சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை முணுமுணுக்க வைத்துள்ளது. அரசு முழுவீச்சில் முழுவீச்சில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு வகைகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக கூடுதலாக சில மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க ரூபாய் 4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.