Categories
உலக செய்திகள்

மீண்டும் ஒரு இனவெறி தாக்குதல்… கறுப்பினத்தவரின் கழுத்தை நெரித்த போலீஸ் …

இங்கிலாந்தில் கறுப்பினத்தை சேர்ந்த ஒரு நபரின் கழுத்தை தன் முழங்காலால் நெரித்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் சென்ற மே மாதம் கடையில் கள்ளநோட்டு கொடுத்ததாக கூறி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை போலீசார் கைது செய்ய முயற்சி செய்யும் போது ஒரு போலீஸ் அதிகாரி ஜார்ஜின் கழுத்தில் தனது முழங்கால்களில் அவர் எழுந்திருக்க முடியாமல் அழுத்தியுள்ளார். இதனால் குரல்வளை நெரிக்கப்பட்டு மூச்சு விடமுடியாமல் கதறிய அந்த கறுப்பினத்தவர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, பல நாடுகளில் நடைபெற்ற “பிளாக் லிவ்ஸ் மேட்டர்” என்ற போராட்டம் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டு கைது சம்பவம் போன்றதொரு சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்று உள்ளது. இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனின் தென்பகுதியில் இஸ்லிங்டன் என்ற நகரம் உள்ளது அவரிடம் சாலை பகுதியில் சிலர் மோதலில் ஈடுபடுவதாக சென்ற வியாழக்கிழமை போலீசாருக்கு தகவல் ஒன்று வந்தது. இந்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் கூடியிருந்த சிலரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் கருப்பினத்தவரான ஒருவரிடம் கத்தி இருந்ததாக  போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய இரண்டு போலீசார்கள் முயற்சி செய்த போது அந்த நபர் ஒத்துழைக்க வில்லை என்பதால் போலீசார் அந்த நபரை வலுக்கட்டாயமாக இழுத்து தரையில் தள்ளி கைது செய்ய முயற்சித்துள்ளனர். தரையில் விழுந்த அந்த நபரின் கழுத்தை ஒரு போலீஸ் அதிகாரி நெறித்துள்ளார்.

அப்போது மூச்சு விட கஷ்டப்பட்ட அந்த நபர் “எனது கழுத்தில் இறங்குங்கள்” நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று கூறியும் அவரை விடாமல் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அருகில் நின்ற பலர் அதை வீடியோவாக பதிவு செய்து இணையதளங்களில் பதிவிட்டனர். இதனால் இந்த விவகாரம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து கைது செய்யும் போது விதிமுறைகளுக்கு மாறாக சந்தேகத்திற்குரிய நபரின் கழுத்தை நெறித்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு உடனிருந்த மற்றோரு காவலர்  பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |