Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு ரூ 5 லட்சம் தேவை… தவித்த தந்தை.. உதவிக்கரம் நீட்டிய காவலர்கள்… குவியும் பாராட்டுக்கள்..!!

சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த இன்ஸ்பெக்டர் தங்கராஜ், காவலர் செந்தில்குமார் ஆகியோருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கவிஷ்கா.. இந்த சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது.. சிறுமியின் தந்தை கார்த்திக் பண உதவி ஏதும் கிடைக்காமல் மிகுந்த மனவேதனையில் தவித்து வந்தார். இதையடுத்து நந்தம்பாக்கம் காவல்துறை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ், காவலர் செந்தில்குமார் மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து ரூ. 5 லட்சம் திரட்டி உதவிசெய்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.. வெற்றிகரமாக சிகிச்சை முடிந்த நிலையில், சிறுமியும் காப்பாற்றப்பட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.. குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவிய இந்த இரு காவல்துறை அலுவலர்களின் சேவையை வெகுவாக பாராட்டி காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.
கவிஷ்கா

இந்த நிகழ்வை அறிந்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் டி.ஜி.ஆனந்த் இன்று நந்தம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, சிறுமியின் உயிரை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தலைமைக்காவலர் செந்தில் குமார் ஆகியோரை ஸ்டேஷனிலேயே நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.. மேலும் பலரும் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |