Categories
சினிமா தமிழ் சினிமா

‘செல்லமா’ பாராட்டிய ஆதவ் கண்ணதாசன் … “தாத்தா கனவுல வந்து அடிப்பாரு” மிரட்டிய சிவகார்த்திகேயன் ..!!

டாக்டர் படத்தின் ஒரு பாடலுக்கு பாராட்டியுள்ள ஆதவ் கண்ணதாசனுக்கு  பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டாக்டர். இந்த படத்தில் சிங்கிள் பாடலான “செல்லமா” என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அனிருத் இசையமைக்க சிவகார்த்திகேயன் பாடல் வரிகளுடன்  உருவாகி இருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் இந்த பாடலை பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் கண்ணதாசனின் பேரனும் நடிகருமான ஆதவ் கண்ணதாசன் இப்பாடல் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாவது,” சிவகார்த்திகேயன் கவிஞரே பயங்கர பார்முல இருக்கீங்க போல! செம கேட்சி சாங் அனிருத்! அராஜகம் பண்றிங்க நெல்சன்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆதவ் கண்ணதாசனின் இந்த பதிவுக்கு பதில் கூறியுள்ள சிவகார்த்திகேயன், “தயவுசெய்து என்னை கவிஞர் என்று சொல்லாதீங்க, தாத்தா கனவுல வந்து அடிப்பாரு” என்று  கூறியுள்ளார். இந்த காமெடி பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |