அறுவை சிகிச்சையின் பொழுது நோயாளியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கேரள மாநிலத்தில் அறுவை சிகிச்சையின்போது நோயாளி வயிற்றினுள் கத்தரிக்கோலை மறந்து வைத்த மருத்துவரின் பெயரில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளா திருச்சூர் கணிமங்கலம் பகுதியை சேர்ந்த ஜோசம் பால் என்ற 55 வயதுடைய நபருக்கு கணையத்தில் தொற்று ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையை நாடியுள்ளார். அதற்கு தகுந்த பணம் அவரிடம் இல்லாத காரணத்தினால் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார். அதனையடுத்து திருச்சூர் அரசு கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இப்போது அறுவை சிகிச்சை செய்த முதன்மை மருத்துவ அவருடைய கவனக்குறைவினால் சிகிச்சைக்கு பயன்படுத்திய கத்தரிக்கோலை வயிற்றினுள் வைத்து தைத்து விட்டார்.
அதனையடுத்து கத்தரிக்கோலை அகற்ற மீண்டும் மற்றொரு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனைப்பற்றி மருத்துவ பாலி டி ஜோசப்பை விசாரிக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட நபரின் மனைவி பிந்து இந்நிகழ்வை குறித்து கூறும்போது, தன் கணவர் ஹெடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனைக்கு செல்ல இயலாததால் அரசு மருத்துவமனைக்கு சென்றோம். அப்போது மருத்துவக் கல்லூரியில் இரப்பை மற்றும் குடலியல் நிபுணர் பிரவீன் என்ற மருத்துவரைப் பார்த்தோம். அவர் மருத்துவ பாலியை பரிந்துரை செய்தார். அம் மருத்துவர் அரசு மருத்துவ கல்லூரியில் பரிசோதனை நடத்துவதற்கு பதிலாக அவரது சொந்த மருத்துவமனையில் ஆலோசனை செய்தார்.
மேலும் அறுவை சிகிச்சையினை செய்து முடிக்க பத்தாயிரம் செலவாகும் என்று கூறி எங்களிடம் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து பத்து நாட்கள் கழித்து பித்த நாளத்தில் மலம் இருப்பதாக சொல்லி மறு அறுவை சிகிச்சை செய்தனர். பிறகு இரண்டு வாரங்கள் கழித்து சிடி ஸ்கேன் செய்தார்கள். அப்போது ஜூனியர் மருத்துவர் ஒருவர் அவருடைய குடலில் தொற்று உள்ளதாக கூறி மற்றொரு அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென கூறியுள்ளார். அவர் சொல்லியதை கேட்டு எங்களுக்குள் சந்தேகம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சென்ற எக்ஸ்ரே எடுத்தபோது வயிற்றினுள் கத்தரிக்கோல் உள்ளது தெரிந்தது. இந்நிலையில் மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை மேற்கொண்டு கத்தரிக்கோலை அகற்றிவிட்டோம்.
தன் கணவர் 25 நாட்களுக்கு மேலாக கத்தரிக்கோலை தன் வயிற்றினுள் சுமந்தபடி மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து உள்ளார் என்று அவரது மனைவி பிந்து வருத்தத்துடன் கூறியுள்ளார். இதை குறித்து மருத்துவர் பாலியிடம் கேட்டோம். ஆனால் அதற்கு தெளிவான பதிலை அவர் கூறவில்லை. விரைவில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறினார். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவரிடம் பேசினோம். இலவசமாக சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனையில் எதற்காக தங்களிடம் பணம் கேட்டார்கள் என்று தங்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. இதனையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் எவரையும் எங்களால் தொடர்பு கொள்ளவும் முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் என பிந்து அவர்கள் கூறியுள்ளார்.