சியோமி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரெட்மி பேண்ட் மாடலின் குளோபல் வெர்ஷன் என்ற எம்ஐ பேண்ட் 4சி மாடலை அறிமுகப்படுத்தியது. புதிய எம்ஐ பேண்ட் 4சி மாடல் 1.08 இன்ச் அளவு சதுரங்க வடிவத்தில் கலர் டச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பில்ட் இன் சார்ஜிங் போர்ட் 14 நாட்களுக்கு மேலாக வழங்கிய பேட்டரி லைஃப் கொடுக்கிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், ஸ்லீப்ன் மாணிட்டர், செடன்ட்டரி ரிமைண்டர், ஆக்டிவிட்டி டிராக்கர், 13 கிராம் மிகக் குறைந்த எடை, ப்ளூடூத் 5.0, 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
சியோமி எம்ஐ பேண்ட் 4சி மாடலானது பிளாக் நிறத்தில் கிடைக்கப்பெறுகிறது. இதனுடன் இணைந்து பிளாக், ஆரஞ்ச், புளூ, கிரீன் போன்ற நிறங்களில் ஸ்டிராப்கள் கிடைக்கின்றன. இந்த எம்ஐ பேண்ட் 4சி மாடலின் விலை 16.7 டாலர்கள் எனவும் இது இந்திய பண மதிப்பில் ரூ.1260 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.