Categories
இந்திய சினிமா சினிமா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியல் வாழ்க்கை… விரைவில் படமாக வெளிவரும்- தயாரிப்பாளர் ராகேஷ் ரெட்டி ..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக திரைக்கு வரும் என தயாரிப்பாளர் ராகேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினுடைய அரசியல் வாழ்க்கை பற்றிய திரைப்படம் ஒன்று விரைவில் திரைக்கு வருவதாக ஆங்கில பட தயாரிப்பாளர் ராகேஷ் ரெட்டி தெறிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை காலையில்  தரிசனத்திற்கு பின் கோவிலுக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் பேசிய போது, “பல நாட்களுக்குப்பின் ஏழுமலையான் தரிசனம் கிடைத்தது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனது வேண்டுதல் நிறைவேறி உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டிக்கொள்கிறேன். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வருகிறோம் அவர் முதல்வராக தேர்வாகி பொறுப்பேற்ற பின் அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகள் இப்படத்தில் இடம் பெற உள்ளது விரைவில் இப்படம் வெளிவரும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |