ஆந்திர மாநிலத்தில் ரூபாய் 72 லட்சம் மதிப்புமிக்க மது பாட்டில்களை வரை ரோடு ரோலரை வைத்து போலீசார் அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்ட காவல் துறையினர் 14,189 மதுபாட்டில்களை அடுக்கி அதன் மீது ரோடு ரோலரை விட்டு சில்லு சில்லாக நொறுக்கியுள்ளனர். இதன் மதிப்பு மட்டும் ரூ 72 லட்சம். மது பாடல்களை வரிசையாக வைத்து போலீசார் அதன்மீது ரோலரை ஓட விட்டு 14 ஆயிரத்திற்கும் மேலான மதுபான பாட்டில்களை உடைப்பதை பார்க்க பலர் அங்கு கூடிவிட்டனர். மது பாட்டல்களால் தீ விபத்து ஏற்படலாம் என முன்னெச்செரிக்கை எடுக்கப்பட்டு தீயணைப்பான்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக, வாகனங்களில் கொண்டுவரப்பட்ட மது பாட்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வாறு 10 காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் தான் இவை. 312 வெவ்வேறு வழக்குகளின் 12130 மூலம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணா மாவட்ட எஸ்பி ரவீந்திரநாத் பாபு அறிவித்துள்ளார். இந்த மது பாட்டில்கள் அழிக்கப்பட்ட போது மேலும் சில போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.