சிம்ம ராசி அன்பர்களே…! இன்று இஷ்ட தெய்வ அருளால் சில நன்மைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண பரிவர்த்தனையை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பணியாளர்களுக்கு சலுகையும் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் ஏதுமிருக்காது.
கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனத் திருப்தியை கொடுக்கும். வேடிக்கை வினோதங்கள் கண்டுகளிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும் வகையில் இன்று முன்னேற்றமான சூழல் அமையும். காதலர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சாம்பல் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சாம்பல் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் மற்றும் வெள்ளை நிறம்.