Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…மனக்கவலை விலகிச்செல்லும்…வெற்றி மேல் வெற்றி குவியும்…!

மகர ராசி அன்பர்களே …!  இன்று எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாக இறை வழிபாட்டுடன் காரியங்களை எதிர்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக தான் உழைக்க வேண்டியிருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். உணவுப் பொருட்களை தயவுசெய்து தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று மாணவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். பெற்றோர் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

துன்பங்கள் தீரும் நாளாக இன்று இருக்கும். மனக்கவலை விலகிச்செல்லும். அடுத்தவரது கருத்தையோ, ஆலோசனையோ கேட்காமல் உங்களது சொந்த புத்தியால் காரியங்களை நீங்கள் செய்விர்கள். மனைவி மூலம் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளை பெறுவீர்கள். அதேபோல மனைவியிடம் ஆலோசனை கேட்டு முக்கியமான பணியை செய்யுங்கள். பெரியோரின் பரிபூரணமான ஆலோசனையும், ஆசியும் உங்களுக்கு கிடைக்கும். இன்று கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். உங்களின் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ள சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்.

Categories

Tech |