கும்ப ராசி அன்பர்களே …! இன்று சமூகத்தில் கிடைக்கிற அந்தஸ்து உங்களுக்கு அதிகமாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகளும் குறையும். பணம் வரவு உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நன்மையை கொடுக்கும். குடும்ப பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை கொடுக்கும். மாலை நேரங்களில் இசைப் பாடலை ரசித்து மகிழ்வீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவு அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். எடுத்த காரியங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். இன்று ஓரளவு அதிர்ஷ்ட மிக்கதாகவே இருக்கும். பெண்களால் யோகம் ஏற்படும். ஆனால் புதிதாக சில முயற்சிகளில் மட்டும் இப்போதைக்கு ஈடுபடவேண்டாம். புதிதாக கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். அது போலவே உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். உணவு விஷயத்தில் கண்டிப்பாக கட்டுப்பாடு வேண்டும். காதல் எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் நிதானமாகப் பேச வேண்டும்.
தேவை இல்லாத விஷயத்தை வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.