கணவர் மனைவியின் வீட்டிற்கு சென்ற சமயம் அவரை பிரிட்ஜில் சடலமாக கண்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரேசிலை சேர்ந்த எலிஸ் ஏஞ்சலா என்பவரது முன்னாள் கணவர் தனக்கு வேண்டிய ஆவணங்களை எடுப்பதற்காக அவரது முன்னாள் மனைவியின் வீட்டிற்கு தன் சகோதரன் மற்றும் சகோதரன் மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்ததால் இரும்பு வேலை செய்பவர் ஒருவரது உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு தனக்கு தேவையான ஆவணத்தை தேடிக்கொண்டிருந்த இவர் வீட்டில் பிரிட்ஜ் சுவர் பக்கம் திரும்பி இருந்ததை கண்டு பிரிட்ஜை திரும்பியுள்ளார். பிரிட்ஜ் அதிக கனத்துடன் இருந்ததால் உள்ளே என்ன உள்ளது என்பதை திறந்து பார்த்துள்ளனர்.
பிரிட்ஜை திறந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிரிட்ஜின் உள்ளே அவரது முன்னாள் மனைவி சடலமாக இருந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கையில் அவர் ஏற்கனவே 26 வயதுடைய நபர் ஒருவரை காதலித்து பின்னர் பிரிந்ததால் அந்த இளைஞன் எலிஸ் ஏஞ்சலாவை தாக்கி காவல்நிலையம் வரை சென்றது தெரியவந்துள்ளது. அதோடு எலிஸ் ஏஞ்சலா பணிபுரிந்து வரும் அலுவலகம் வரை அந்த இளைஞன் தேடிச் சென்றதால் காவல்துறையினர் அந்த இளைஞன் மீது சந்தேகம் கொண்டு தேடிவருகின்றனர்.