Categories
சினிமா தமிழ் சினிமா

அறிவியலை குறை சொல்லவில்லை… ஆனால் இது தான் திருப்தி – நடிகர் சூரி..!!

வீட்டில் படம் பார்ப்பதை விட தியேட்டரில் படம் பார்த்தால்தான் திருப்தி அளிப்பதாக நடிகர் சூரி கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டு விட்டதால் நிறைய நடிகர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். நடிகைகளில் பெரும்பாலானோர்கள் ருசியாக சமைப்பது எப்படி என்று புத்தகம் பார்த்து படித்து சமைக்க கற்றுக் கொண்டுள்ளார்கள். நகைச்சுவை நடிகரான சூரி தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகிலுள்ள கிராமத்துக்கு போய் விட்டார்.

ஊரடங்கு காரணமாக தியேட்டரில் வெளியாக வேண்டிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றது. சமீபத்தில் பொன்மகள் வந்தாள், பென்குயின் போன்ற திரைப்படங்கள் ஓடிடி தளத்திலேயே வெளியானது இது குறித்து நடிகர் சூரியிடம் கேட்டபோது, “அறிவியல் வளர்ச்சியை  நாம் குறை சொல்லக் கூடாது. அதை யாராலும் தடுக்கவும்  முடியாது. இருந்தாலும் வீட்டுக்குள் உட்கார்ந்து படம் பார்ப்பது அவ்வளவு திருப்தி அளிப்பதாக இல்லை. தியேட்டருக்கு போய் விசிலடித்து ஆரவாரம் செய்து கொண்டு படம் பார்த்தால் தான் திருப்தியாக இருக்கும்” என்று கூறியுள்ளார் நடிகர் சூரி.

Categories

Tech |