Categories
மாநில செய்திகள்

1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோ பதிவு செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோ பதிவு செய்ய தகுந்த ஆசிரியர்களை தேர்வு செய்து பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரை அனைத்து அழகுகளுக்கான பாடப் பதிவினை மேற்கொள்ள செய்யாமல் வெவ்வேறு ஆசிரியர்களை பயன்படுத்துதல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கு உரிய பாட ஆசிரியர்கள் தேர்வு செய்வதுடன் அவர்களுக்குத் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக தகவல் அளித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆசிரியர்களை அனுப்பி வைத்து பணிகள் தொய்வின்றி நடைபெற அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |