ஒரு நாளைக்கு மனிதன் சராசரியாக 6 ஆயிரம் முறை சிந்திக்கிறான் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
மனிதனாய் பிறந்த அனைவருமே சிந்தனை இல்லாமல் இருக்க இயலாது. குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் சிந்தனையானது மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இதில் நல்லவை தீயவை என்ற இருவித சிந்தனைகள் உள்ளன. ஆதலால் எத்தகைய சிந்தனையும் இன்றி மனிதனால் ஒரு நாள் கூட முழுமையாக இருக்க முடியாது எனலாம்.
இதனைப்பற்றி கனடா நாட்டு குயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 6000 திற்கும் மேல் சிந்திக்கிறான். மேலும் மனிதனின் மூளையினுள் சிந்திக்கும் இடத்தில் தொடங்கி முடியும் இடம் வரையில் அனைத்தையும் அடையாளம் காட்டி வைத்திருக்கின்றோம் என கூறுகின்றார்கள். இதனைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள், மனிதன் ஒருவனை தனிமையில் வைத்திருந்தால் அவன் ஒரே சிந்தனையை கொண்டவனாய் இருப்பான் என்றால் அவன் “சிந்தனை புழு” என அழைக்கப்படுகின்றான்.