குடியிருப்புகள் கட்டுதல் விற்பனை செய்தல் பராமரித்தல் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், வீடு கட்டுதல், விற்பனை செய்தல், பராமரித்தல் ஆகியவற்றில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து விட்டது. இதில், வெளிப்படையான வர்த்தக நடைமுறைகள் பின்பற்றப்படுவதை, உறுதி செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் கட்டுமான நிலையில், ஒப்பந்த நிறுவனம், வீடு வாங்குவோர் இடையே பிரச்னை ஏற்படுகிறது. மேலும், கட்டி முடிக்கப்பட்ட பின், விற்பனையில் குறைபாடு, விற்பனைக்கு பின், சங்கம் அமைத்து பராமரிப்பதிலும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எனவே கட்டுமான நிறுவனங்கள் உரிமையாளர்கள் குடியிருப்பு சங்கங்களை கட்டுப்படுத்தும் வகையில்அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டத்தில் திருத்தங்கள் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.