நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளுர், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். மேலும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ஜூலை 21, 22 தேதிகளில் கேரள கடலோர பகுதிகள், மாலத்தீவு லட்சத்தீவு 23 வரை தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.