Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு – முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் ….!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டம் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார்.

கொரோனா  பாதிப்பில் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே தமிழகம்  இரண்டாவது இடமாக  இருந்து வருகிறது. மகராஷ்டிரா அடுத்தபடியாக டெல்லி டெல்லி அடுத்தபடியாக தமிழகம் இருக்கிறது இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதில் முக்கியமான விஷயங்களையும் சொல்லியிருக்கிறார். இன்று  காலையில் நிகழ்ந்த தொலைபேசி உரையாடலில் தமிழகத்தில் எடுக்கப்பட்டிருக்க கூடிய தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கிறது என்பதை கேட்டறிந்தார்.

இந்தியாவிலேயே அதிக பட்சமான பரிசோதனை செய்கின்றோம் என்றும், நாளொன்றுக்கு 48 ஆயிரம் பரிசோதனை நடைபெறுகின்றது என்றும் முதல்வர் தெரிவித்தார் . மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, தமிழ்நாடு அரசு நடவடிக்கை வருவதாகவும், விரைவில் தமிழ்நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |