முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தனது ஓய்வு முடிவை பற்றி பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் தனது ஓய்வு பற்றிய முடிவை எடுத்தது குறித்து தற்போது பகிர்ந்துள்ளார். அதில், கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் ஓய்வு பெற்ற பிறகு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறினேன். பின்னர் சில யோசனையின் அடிப்படையில் கிரிக்கெட் பயிற்சியாளராக மாறுவது அல்லது சப்-கோச்சாக இருக்கலாம் என முடிவு செய்தேன் ஆனால் இவை இரண்டில் எதை தேர்வு செய்வது என சந்தேகம் . எனவே அதில் எதை தேர்வு செய்வது என்ற சந்தேகம் எழுந்தபோது கபில்தேவை சந்தித்தேன். அவர் எந்த முடிவாக இருந்தாலும் அவசரப்பட்டு எடுக்காமல் ஓய்வுக்குப் பிறகு சில காலங்கள் விளையாட்டில் இருந்து தள்ளி இருங்கள். எதையும் வெளியிலிருந்து ஆராய்ந்த பிறகு உங்களுக்கு எந்த பணி ஒத்துப் போகிறதோ அது உங்களுக்கு தெரிய வரும். உங்களுக்கு பிடித்த பணியில் சேருமாறு ஆலோசனை வழங்கினார். அதற்கு பிறகு நான் பயிற்சியாளர் பணியை தேர்ந்தெடுத்தேன் அப்பொழுது எனக்கு இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக பணி புரிய வாய்ப்பு கிடைத்தது.
அதோடு நல்ல அனுபவமும் கிடைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக மற்றும் கேப்டனாக பணியாற்றிய அனுபவம் எனக்கு கிடைத்தது நல்வாய்ப்பு. உடனடியாக கிடைக்கும் முடிவுகள் குறித்து எந்த கவலையும் இல்லாமல் அதிகப்படியான வீரர்களுடன் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. கிரிக்கெட் விளையாட்டில் இந்திய ஏ அணி மற்றும் யு 19 அணி பயிற்சியாளராக பணியை தொடர்வது எனக்கு மன நிறைவை அளித்தது. பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் அதே நேரத்தில் நாற்பத்தைந்து ஐம்பது வீரர்களுடன் மற்றும் பயிற்சியாளர்கள் உடல் திறன் மேம்பாட்டு அலுவலர்களுடன் பணிபுரிவது எனக்கு மிக சந்தோசம் அளிப்பதாக இருந்தன.
சர்வதேச போட்டியில் நான் அறிமுகமானபோது எனது படிப்பை விட்டு கிரிக்கெட் விளையாட்டை தொடர்வதா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அப்போது கிரிக்கெட் விளையாட்டை தொடர வேண்டும் என்பதற்காக நான் சிஏ அல்லது எம்பிஏ படிப்பை விட்டு விட்டேன். அதனால் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததை மறுக்கவில்லை. கிரிக்கெட் விளையாட்டில் நான் ஒருநாள் போட்டிகளில் நான் ஒரு நல்ல வீரனா ? இல்லையா ? என்பதில் சில சந்தேகங்கள் ஏற்பட்டதனால் நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவே ஆசைப்பட்டேன். அதற்க்காக நான் மிகவும் பயிற்சி மேற்கொண்டேன்.