Categories
சினிமா தமிழ் சினிமா

நான் நடிகன் மட்டுமல்ல…. இந்தத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவன்….!!

சமூகப்பணி படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற நான் தற்போது ஒரு விளம்பர படம் ஒன்றை எடுத்து நடித்துள்ளேன் என நடிகர் ரவி மரியா தெரிவித்துள்ளார்.

அரசு தயாரித்த கொரோனா பற்றிய விளம்பர படத்தில் வில்லன் நடிகர் ரவிமரியா நடித்திருக்கிறார் இதனைப்பற்றி அவர் கூறியது. “என்னை பற்றி பலருக்கும் தெரிந்தது நான் நடிகர் மற்றும் டைரக்டர் என்று தான்”. அதுமட்டும் இன்றி நான் சமூகப்பணி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவன். ஆனாலும் என் படிப்பை பயன்படுத்த முடியவில்லையே என்ற வேதனையாக  இருந்தது. விதமாக யோகிபாபு, ரமேஷ்கண்ணா, சிங்கம்புலி, ரோபோ சங்கர், விமல், ஆதி, நட்டி ஆகியோரை வைத்து அதை ஈடுகட்டும்  விதமாக ‘கொரோனா பற்றிய விளம்பர படத்தில் நடித்தேன். மருத்துவ விதிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து சமூகப்பணிகளில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறேன். கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசவைத்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவிடுகிறேன் எனக் கூறியுள்ளார்

 

Categories

Tech |